சென்னை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் எத்தியார்ட் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், இன்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 168 பயணிகள் 10 விமான ஊழியர்கள் இருந்தனர்.
விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டுபிடிக்கப்பட்டு அடுத்த சில நிமிடத்திலேயே விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
தற்போது விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து எடுத்த, உடனடி நடவடிக்கை காரணமாக, விமானம் விபத்தில் இருந்த 178 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.