பாகுபலி 2 ? இணையத்தில் வைரல்

400
Advertisement

மனிதர்களை விட  விலங்குகள்  அளவற்ற அன்பை வெளிபடுத்தக்கூடியவை , இதில் காட்டு விலங்குகளும் அடங்கும் . தன் உயிரை கொடுத்து உரிமையாளரை காக்கும் குணம் கொண்டவை விலங்குகள்.

மனிதன் உடனான விலங்குகளின்  பாச பிணைப்பை உணரச்செய்யும் பல வீடியோகள் இணையத்தில் உள்ளது. தற்போது அதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், பாகன் தன் யானையின் தும்பிக்கை மற்றும் நெற்றியை ஏணியாகப் பயன்படுத்தி   கெத்தாக யானையின் மேல் உட்காருகிறார். பார்ப்பதற்கு பாகுபலி படத்தில் கதாநாயகன் யானை மீது  ஏறியது  போல உள்ளது .

இந்த வீடியோ  தற்போது , இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையில் யானை உடன் நடந்து செல்லும் பாகன் ஒருவர் , யானை மீது  உட்கார நினைத்தார். இதனை புரிந்துகொண்ட அவரின் வளர்ப்பு யானை தன்  தும்பிக்கையை நீட்டி தன் உரிமையாளரை அசால்டாக தூக்கிவிடுகிறது. பாகன் தன் மற்றொரு காலை யானையின் நெத்தியின் மீது வைத்து யானையின் மீது உட்கார்த்துவிடுறார். இதை ஐபிஎஸ் அதிகாரி திபன்ஷு கப்ரா தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துருந்தார்.

பார்ப்பதற்கு ரசிக்கும்படி உள்ள இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்துவரும்  நெட்டிசன்கள் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர் .

மனிதன் – விலங்கு இடையேயான மோதல்கள் பற்றிய செய்திகளுக்கு மத்தியில், இந்த ஆழமான பிணைப்பை பார்ப்போரை மீண்டும் மீண்டும் ரசித்து பார்கவைத்துள்ளது .