பாகனுடன் நீந்தி வெள்ளப்பெருக்கை  கடந்த யானை

214
Advertisement

பல கடலோர மாநிலங்கள் பருவமழை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பீகாரின் பல பகுதிகளும் சில நாட்களுக்கு முன்பு இடைவிடாத கனமழையால் வெள்ளம்  போன்று காட்சியளித்தன. அதிக மழை காரணமாக

கங்கை உள்ளிட்ட பீகாரில் உள்ள ஆறுகளில் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்து, பல மடங்கு அபாய அளவைத் தாண்டி, அருகிலுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், பீகாரின் வைஷாலி மாவட்டம், ரகோபூரில்  கங்கை நதி பெருக்கெடுத்து ஓடியது,அதில்  யானை ஒன்று துணிச்சலாக தன் பாகனை மேலே உட்காரவைத்து வெள்ளப்பெருக்கை  நீந்தி கடந்த வீடியோவை வைரலாகி வருகின்றனர் இணையவாசிகள்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில்,  யானை கிட்டத்தட்ட நீரில் மூழ்கிய நிலையில்,பாகன் மேலே உட்காந்து இருக்க, வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் நதியில்,சுமார்  மூன்று கிலோமீட்டர் தூரம் நீந்திச் கரையை அடைந்தது.இதயத்துடிப்பை அதிகரிக்கச்செய்யும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.