டெல்லியில் ஒற்றை சாளர வசதியின் கீழ் ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஒற்றை சாளர வசதியின் கீழ் தலைநகர் டெல்லியில் ஆயிரம் மின்சார வாகன சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த சார்ஜிங் மையங்களில் சுமார் 59 சதவிகிதம் குடியிருப்போர் நல சங்கங்களால் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 சதவிகித EV சார்ஜர்கள் அலுவலக வளாகங்களிலும், 13 சதவிகிதம் மின் ஆட்டோ ரிக்ஷா பார்க்கிங் பகுதிகளிலும் நிறுவப்பட்டுள்ளன. மால்கள், கடைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நிறுவப்படும் இந்த ஆயிரம் சார்ஜிங் பாயிண்ட்டுகளுக்கு அரசு மானியமாக 60 லட்சம் ரூபாய் செலவிட உள்ளது குறிப்பிடத்தக்கது.