இருசக்கர வானத்தில் எரிபொருள் இல்லை என ஓட்டிவந்தவருக்கு கேரளா போலீஸ் போட்ட சலான் இணையத்தில் வைரலாகி வருகிறது. பாசில் சியாம் என்பவர், தனது என்ஃபீல்டு பைக்கில் பணியிடத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது,ஒன்-வே சாலையில் சென்றதாக கூறப்படுகிறது.அப்போது,அவரை இடையில் நிறுத்திய போக்குவரத்து காவல்துறை,அவரிடம் அபராதம் வசூலித்துள்ளது.
பணிசெல்லும் அவசரத்தில் அவரும் அபராத்தொகையான 250 ரூபாயை கொடுத்து அதற்கான ரசீதையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.பின் அலுவலகம் சென்ற பிறகு அந்த ரசீதியை எதிர்ச்சியாக பார்த்த பின் தான் தெரிந்தது அவருக்கு எரிபொருள் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக அபராதம் போடப்பட்டுள்ளது.
அதையடுத்து,இந்த ரசீதியை வைத்து வழக்கறிஞர் ஒருவரை நாடியுள்ளார் பாசில்,பின்பு விசாரித்ததில் அந்த அபாரதற்கான விளக்கம் அளிக்கப்பட்டது.கேரள போக்குவரத்து சட்டத்தின்படி, எரிபொருள் தொடர்பான குற்றம் வணிக வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும்,தவறுதலாக ரசீதியில் பதிவாகியுள்ளது என தெளிவுபடுத்தப்பட்டது.