கண்களின் மொழிதான்.
கண்களாலேயே காதலர்கள் பேசிக்கொள்கின்றனர்.
ஒரு பார்வையிலேயே மேலதிகாரியின் கோபம் வெளிப்படுகிறது.
கண்களின் மொழியைப் பற்றிப் பார்ப்போமா…
கண்கள் வலப்புறமாகப் பார்த்தால் பொய் சொல்கிறது.
கண்கள் இடப்புறமாகப் பார்த்தால் உண்மை பேசுகிறது
கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
கண்கள் கீழே பார்த்தால் பணிந்து போகிறது
கண்கள் விரிந்தால் ஆச்சரியப்படுகிறது.
கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
கண்கள் வலமும் இடமும் மாறி மாறி சுழன்றால் பதற்றத்தில் உள்ளது
கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.
கண்கள் மூக்கைப் பார்த்தால் கோபப்படுகிறது.
கண்கள் எதைப் பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
கண்கள் கழுத்துக்குக் கீழ் பார்த்தால் காமம்.
கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.
கண்கள் இடமாகக் கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது.
கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளைத் தேடுகிறது.
கண்கள் வலமாகக் கீழே பார்த்தால் விடைதெரியாமல் யோசிக்கிறது.
கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய்சொல்ல யோசிக்கிறது.
கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது.
கண்கள் ஓரப் பார்வையால் அவ்வப்போது பார்த்தால் விரும்புகிறது.
கண்கள் மூடித் திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.
கண்களைக் கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.
கண்களைக் கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
கண்கள் மூடித் திறந்தால் வெறுக்கிறது.
கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.
கண் புருவங்கள் சுருங்கினால் பேச விரும்பவில்லை.
கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.
ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை.
இரண்டு கண்களும் மூடியிருந்தால் தூக்கம்.
கண்களைத் திறக்கவில்லையெனில் மரணம்.
நீங்கள் இப்படியெல்லாம் செய்து பார்த்ததுண்டா?
இனிமேல் முயற்சி செய்து பாருங்க உங்க சொந்த ரிஸ்க்குல..