தமிழ்நாட்டு எம்பிக்கள் நாகரிகமற்றவர்கள் என நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இழிவுபடுத்திப் பேசிய ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து பூவிருந்தல்லியில் கொடும்பாவியை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பூவிருந்தவல்லி ஒன்றிய திமுக சார்பில் கோயம்பேடு-பூவிருந்தவல்லி சாலையில் குவிந்த திமுகவினர் திடீரென ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகைப்படத்தை செருப்பால் மற்றும் துடப்பதால் அடித்து தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
பின்னர் தர்மேந்திர பிரதானின் கொடும்பாவியை ஊர்வலமாக இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்து பெட்ரோல் ஊற்றி கொளுத்தினர். இதனால் பூவிருந்தவல்லி கோயம்பேடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் கொடும்பாவியை எரிந்த பின்பு அங்கிருந்து சென்றனர்.