என்னதான் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதால், ஒரு சில நன்மைகள் இருந்தாலும் சிறு சிறு பேமென்டுகளுக்கு கிரெடிட் கார்டை ஸ்வைப் செய்வதால் உண்மையில் சில பின்னடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன.
உங்கள் கிரெடிட் கார்டுக்கான உச்ச வரம்பை விட அதிகமாக செலவழிப்பது உங்களுடைய கிரெடிட் பயனீட்டு விகிதத்தை பாதிக்கலாம். நீங்கள் ஒவ்வொரு மாதமும் முழு தொகையை செலுத்தும் பழக்கமுள்ளவர் மற்றும் ரிவார்டுகள், காஷ்பேக் போன்றவற்றைப் பூரணமாகப் பயன்படுத்தக்கூடிய நபர் என்றால், சிறு செலவுகளுக்காக கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதில் தவறு எதுவும் இல்லை.
நீங்கள் அளவுக்கு அதிகமாக செலவு செய்பவர், டியூ தேதிகளை மறந்து விடுபவர் அல்லது அடிக்கடி கடன் சிக்கலில் மாட்டிக் கொள்பவர் என்றால் சிறு செலவுகளுக்காக கிரெடிட் கார்டை பயன்படுத்துவது நல்லதல்ல. ஆகவே, இது போன்ற பேமெண்டுகளுக்கு நீங்கள் கேஷ் அல்லது UPI முறையை பயன்படுத்தலாம்.