23.05.2026;தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை…இன்றைய நிலவரம் விலை என்ன தெரியுமா?

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத் தாழ்வுடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஒரு நாள் உயர்ந்து, மறுநாள் குறையும் நிலை நீடித்து வருகிறது.

கடந்த 21ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14,750க்கும், ஒரு சவரன் ரூ.1,18,000க்கும் விற்பனையானது. பின்னர் 22ஆம் தேதி தங்கம் விலை உயர்ந்து, கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.14,810க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,18,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மீண்டும் விலை சரிவடைந்து, கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,780க்கும், சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கும் விற்றது.

இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதாவது, தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.14,730க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,95,000க்கும் விற்பனையாகிறது.

Related News

Latest News