Friday, January 24, 2025

திராவிட மாடலை கேலி செய்பவர்களுக்கு பெரியாரின் கைத்தடி ஒன்று போதும் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தந்தை பெரியாரின் நினைவு நாளை ஒட்டி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது திராவிட கழக தலைவர் கீ.வீரமணி பெரியாரின் அடையாளமான கைத்தடி போன்ற பரிசை முதல்வர் ஸ்டாலினுக்கு வழங்கினார்.

இதையடுத்து மு.க ஸ்டாலின் பேசுகையில் “நான் எத்தனையோ நினைவுப் பரிசுகளைப் பெற்றிருந்தாலும், இந்த பரிசுக்கு எதுவும் ஈடாகாது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேலி செய்பவர்களுக்கு இந்த கைத்தடி ஒன்றே போதும்.

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட தமிழினம் ஒற்றுமை பெறவும், சுயமரியாதை பெற்று மேலெழுந்து நிற்கவும் தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர் பெரியார். அவரது வாழ்க்கை வரலாற்றை நம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் வகையில், டிஜிட்டல் நூலகம், ஆய்வு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது என அவர் பேசினார்.

Latest news