சென்னையில் நாளை (24.05.2026) மின்தடை… எந்தெந்த Area தெரியுமா?

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் நாளை பகல் நேர மின் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது மின்சார வாரியம். அதன்படி, நாளைய (24.05.2026) மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை தற்போது பார்க்கலாம்.

அதன்படி, அம்பத்தூர்:

சிட்கோ தொழிற்பேட்டை, செக்டர் 3-இல் உள்ள 1வது குறுக்கு பிரதான சாலை, 1 மற்றும் 2வது லேன், 2 மற்றும் 3வது தெரு, பஜனை கோவில் தெரு, நல்ல கிணறு தெரு, கன்னியம்மன் கோவில் தெரு, குள்ளன் தெரு, பாடசாலை தெரு, கோரமண்டல் டவுன், சி.டி.எச். சாலை, மேனாம்பேடு சாலை, சிட்கோ தொழிற்பேட்டை 10 மற்றும் 11வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

முகப்பேர்:

முகப்பேர் 2வது பிரதான சாலை, ரெட்டிப்பாளையம் பிரதான சாலை, முகப்பேர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சாலையில் பின்புறம் உள்ள C19, C18, C15 மற்றும் C16 பகுதிகள், அம்பத்தூர் தொழிற்பேட்டை (தெற்கு பகுதி) உள்ளிட்ட இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News