கொளுத்தும் வெயிலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் மழை… குளு குளு வானிலை அப்டேட்!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக நிலவி வரும் கடும் வெப்பத்தால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல பகுதிகளில் வெயில் கடுமையாக பதிவாகி, மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடையே சில மாவட்டங்களில் மழை பெய்ததால் வெப்பம் ஓரளவு குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக மீண்டும் வெப்பம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் வரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தின் சில பகுதிகள், புதுவை மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை ஏற்பட வாய்ப்புள்ளது.

நாளை நீலகிரி, ஈரோடு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 24 முதல் 26ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதே சமயம், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

Latest News