துப்பாக்கி முனையில் சிறுவர்களிடம் “நாய்” கடத்தல்

192
Advertisement

பொதுவாக குழந்தைகளுக்கு பிடித்த மற்றும் நெருக்கமான செல்லப்பிராணி என்றாலே அது நாய்கள் தான்.குழந்தைகளுக்கு பாதுகாப்பான ஒரு நண்பனாக திகழ்கிறது நாய்கள். விளையாட்டு  நேரத்தில் குழந்தைகளுடன் விளையாடுவது, தூங்கும் நேரத்தில் குழந்தைகளை தூங்கவைப்பது , ஆபத்து நேரத்தில் குழந்தைகளுக்கு பாதுகாப்பாகவும்  நடந்துகொள்ளும் நாய்கள்.

உடன் பிறவா சக உடன்பிறப்பாக தான் குழந்தைகள் – நாய்கள் பிணைப்பு  இருக்கும். இது தொடர்பான பல வீடியோக்கள் இணையத்தில் உலாவருகிறது. இந்நிலையில்  செல்லமாக வளர்ந்துவந்த  நாய்க்குட்டியை துப்பாக்கி முனையில் கடத்திச்சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது

அமெரிக்கவின் மில்வாக்கி பகுதி தெரு ஒன்றில், 12 வயதான அலனா வான் என்ற  சிறுமி ,தன் 10 வயது சகோதரனான இசயா சவாங்வோங்சவன்  உடன் செல்லமாக வளர்த்து வந்த நான்கு வயது நாய் குட்டியை நடைப்பயிற்சிக்கு அழைத்துசென்றுள்ளனர்.

இந்நிலையில்,தெருவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார்,நேராக இருவரிடமும் வந்த அந்த நபர் ,அவர்களின் நாயை கொஞ்சு விட்டு ,நாயை பற்றி சில கேள்விகளை கேட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் , தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை அந்த சிறுமி மற்றும் சிறுவனிடம் காட்டி , அவர்களின் நாய்க்குட்டியை  கடத்திச்சென்றான்.

இது குறித்து   உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக  தெரிவித்தனர் சிறுவர்கள், மேலும் சம்பவத்தில்  இருவருக்கும் லேசான காயம் காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

பட்டப்பகலில் , குழந்தைகளை துப்பாக்கி முனையில் நிற்கவைத்து ,அவர்களின் நாய்க்குட்டியை கடத்தி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.