குழந்தைகள் அழுவதற்க்கு தொடங்கிவிட்டால் அழுகையை நிறுத்துவது மிகவும் கடினம்.குழந்தைகள் அழுவதை பார்ப்பதற்கு பாவமாக இருந்தாலும் ,ரசித்துப்பார்த்துக்கொண்ட இருப்போம் நாம்.
இங்கு ஒரு குழந்தை அழுதுகொண்டு இருக்கிறது. ஆனால் அழுகையை நிறுத்தியது குழந்தையின் பெற்றோரோ,உணவினர்களோ அல்ல அது ஒரு குட்டி பூனை.
இணையத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், குழந்தை ஒன்று கீழே அமர்ந்தபடி அழுதுகொண்டு இருக்கிறது.குழந்தை அழுகிறதை அறிந்த அவ்வீட்டின் செல்லமாக வளர்க்கப்படும் பூனை குழந்தையின் அருகில் வந்து,
குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சிக்கிறது.ஆனால் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறது,பின் அந்த பூனை குழந்தையின் முதுகில் தட்டி கொடுப்பது போல ஒரசுகிறது,பின் குழந்தையின் முன் சென்று நான் இருக்கிறேன் அழுகாத என்பது போல குழந்தையை தொடுதல் மூலம் உணர்த்துகிறது.
பூனையின் இந்த அரவணைப்பில் அழுகையை நிறுத்திவிடுகிறது அந்த குழந்தை.தற்போது இணையத்தில் பலரின் இதயங்களை கவர்ந்து வருகிறது இந்த வீடியோ.