தந்தையின் முன் அவரின் பெண்ணை தைரியமாக ப்ரொபோஸ் செய்த நபர் ! 

251
Advertisement

இணையதளம் மனிதர்களின் பல்வேறு முகங்களை வெளிப்படும் ஒரு தளமாக உள்ளது.அவர்கள் வாழ்வில் நிகழும் மறக்கமுடியாத தருணங்களை அனைவரிடத்திலும் பகிர்ந்து மகிழ ஒரு இடமாகவும் உள்ளது.

இன்ஸ்டாவில் பகிர்ந்த ஒரு வீடியோ,ஒரு தந்தையின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதம் உள்ளது.அதில்,தந்தை ஒருவர் பூங்காவில் நீர் நிலை அமைக்கப்பட்டிருக்கும் ஓர் இடத்தில் அமர்ந்துள்ளார்.அப்போது அவரின் மகள் அருகே நின்றுகொண்டு இருக்கிறார்.

எதிரே வரும் ஒரு ஆண்,அந்த பெண்ணின் முன்னே மண்டியிட்டு மந்திரத்தை கொடுத்து தன் காதலை வெளிப்படுத்திக்கிறார்.நண்பன் தன்னை ப்ரொபோஸ் செய்ததில்,அதுவும் தன் தந்தையின்  முன் இதை செய்ததில் இன்ப அதிர்ச்சியில் உறைந்து நிற்கிறார்.

மற்றொரு புறம் அவரின் தந்தை, அவ்வழியாக விளையாட வந்த குழந்தைகளை பார்த்து, என் மகளிடம் அவர் ப்ரொபோஸ் செய்கிறார்.எனவே குழந்தைகளின் பெற்றோரிடம், சற்று நேரம் காத்திருங்கள் என கேட்டக்கொண்டார்.பின் மகள் அந்த காதலை ஏற்றுக்கொண்டதால் உணர்ச்சிவசப்படும் தந்தை பின்னே நின்றுகொண்டு இருக்கும் நபர்களை பார்த்து,தன் மகள் காதலை ஏற்றுக்கொண்டால் என மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

மகளும் தந்தையை பார்த்து உண்வர்க்கசப்பட இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.வைரலாகி வரும் இந்த வீடியோவிற்கு,மகள் மீதான தந்தையின் பாசத்தை குறித்து விமரிசித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.