பா.ஜ.க பண பலம் மற்றும் அதிகார பலத்தால் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது – அமைச்சர் துரைமுருகன்

252

பா.ஜ.க பண பலம் மற்றும் அதிகார பலத்தால் தமிழகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், லத்தேரியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ.க-வை முறியடிக்க, தி.மு.க-வின் பூத் கமிட்டிகளை வலுவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

மத்திய பா.ஜ.க அரசை அச்சுறுத்த, 2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.