குடிபோதையில் வாகனம் ஓட்டிய சந்தேகத்தின் பேரில் நாய் ஒன்று கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
பீகார் காவல்துறை வழக்கம் போல் குறிப்பிட்ட பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுருந்தனர்.அப்போது ஒரு வாகனத்தில் இரு நபர்கள் குடிபோதையில் 6 வெளிநாட்டு மதுபாட்டில்களுடன் பிடிபட்டனர்.
அவர்களுடன் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் ஒன்றும் இருந்தது.இதையடுத்து காவல்துறை அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் அளித்த பதில் காவல்துறையின் பொறுமையை சோதிக்கும் விதமாக இருந்துள்ளது.
அவர் அளித்த பதில் , அந்த நாய் தான் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிவந்ததாக சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளனர்.ஒருகட்டத்தில் கடுப்பான காவல்துறை இருவருடன் அந்த நாயையும் கைது செய்து அழைத்து சென்றனர்.
தற்போது அந்த நாய் சிறையில் அடைக்கப்பட்டு காவலர்களை கலங்க வைத்துள்ளது. இப்போ அதை எப்படி சாமாளிப்பது,இந்த நாய்க்கு ஹிந்தி மொழி தெரியாது, ஆங்கிலம் மட்டுமே தெரியும். இதனால் எப்படி பேசுவது என்று காவல்துறைக்கு தெரியவில்லையாம்.
மேலும் அந்த நாய் குறிப்பிட்ட வகை உணவை மட்டும் தான் சாப்பிடுமாம்.இதனால், வழக்கு முடியும் வரை எப்படி அந்த நாயை பராமரிப்பது என்று குழப்பத்தில் உள்ளனர்.