ஜூன் மாதத்தில் இருந்து பயன்பாட்டுக்கு வர உள்ள EPFO 3.0 புதிய மாற்றம், கோடிக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையை நேரடியாக மாற்ற போகிறது.
முதல் முக்கிய மாற்றம் என்னவென்றால் — இனிமேல் EPFO கணக்கில் உள்ள உங்கள் PF பணத்தை ஏடிஎம் மூலமாக நேரடியாக எடுக்க முடியும். கடினமான ஆன்லைன் செயல்முறைகள், வங்கி அலுவலக ஓட்டங்கள் — இவை எல்லாம் கடந்த காலம்! தற்போது ஒரு ATM கார்டு போதுமானது!
இதையடுத்து பணியாளர் பங்களிப்பு வரம்பு குறித்து பெரிய மாற்றம் வரப் போகிறது. தற்போது உள்ள 12% கட்டுப்பாடு நீக்கப்படலாம். ஒவ்வொருவரின் சேமிப்பு பழக்கங்களை பொருத்து PF பங்களிப்பை அதிகரிக்க அல்லது மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட இருக்கிறது.
குறிப்பாக பிஎஃப் பணம் திரும்பப் பெறும் செயல்முறைகள் முழுவதுமாக தானியங்கி (auto-mode) முறையில் செயல்படும். கடந்த சில நாட்களில் மட்டும் 21.6 மில்லியன் கிளைம்கள், 3 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதிகாரிகள் கையால் பார்க்கும் நிலை இல்லை. பான், வங்கி கணக்கு சோதனை எல்லாம் கணினி மூலம் நேரடியாக செய்யப்படும்.
அடுத்ததாக PF advance ஒரு லட்சம் ரூபாய் வரை எளிதாக எடுக்கலாம். மருந்து, வீடு, திருமணம், கல்வி உள்ளிட்ட தேவைகளுக்கு PF advance கேட்டு 1-2 மாதம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாமே விரைவில் நடக்கும்.
இறுதியாக 5 லட்சம் ரூபாய் வரை PF தொகையை auto-settlement முறையில் பெறலாம். எந்த ஒரு கூடுதல் சோதனையும் இல்லாமல், பான் மற்றும் வங்கி சோதனைகள் மட்டுமே தானாகச் செக் ஆகி, மூன்று நாட்களில் பணம் உங்கள் கணக்கில் வந்து சேரும்.
இந்த மாற்றங்கள் அனைத்தும் ஜூன் மாதம் முதல் செயல்பட இருக்கின்றன. EPFO 3.0 மூலம், PF பணம் வாங்கும் முறையே இப்போது மாற போகிறது.