நீரிழிவு நோய்க்கு கைகொடுக்கும் முருங்கை என்னும் மந்திரம்!!

294
Advertisement

நீரிழிவு நோய் ஒருவருக்கு வந்துவிட்டால் அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.ஆரோக்கியமான உணவு சிறந்த வாழ்க்கைமுறை மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் உணவுகள் மற்றும் பானங்களின் கிளைசெமிக் குறியீடு அளவு மிகவும் முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்படுத்த குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை உட்கொள்ள வேண்டும். முருங்கை மற்றும் அதன் இலைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

நீரிழிவு நோயாளிகள் முருங்கை மற்றும் அதன் இலைகளை சாப்பிட வேண்டும் அப்படி சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என்று மருத்துவர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.

மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை பல நூற்றாண்டுகளாக நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கையில் ஆன்டிவைரல், ஆண்டிடிரஸன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்களால் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

முருங்கை இலைகளில் குர்செட்டின் உள்ளது. இது ஒரு ஆண்டு ஆக்சிடெண்ட்ட் ஆகும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள மற்றொரு ஆன்டிஆக்ஸிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் ஆகும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. முருங்கையில் காணப்படும் குளோரோஜெனிக் அமிலம், உடல் சர்க்கரையை சிறப்பாகச் செயலாக்க உதவுகிறது. இதன் தாக்கம் இன்சுலின் அளவுகளிலும் தெரியலாம்.

எனவே இயற்க்கை நமக்களித்த வரமாகிய முருங்கையை வாரத்தில் இருமுறையாவது சேர்த்துக்கொள்ளுங்கள்.