Friday, June 13, 2025

ரேஷன் கார்டுதாரர்கள் கவனம்! 3 மாத சலுகை ஒரே முறையில்! தமிழக அரசின் புதிய அறிவிப்பு!

தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கியமான அறிவிப்பு வெளியாகியிருகிறது.
வரும் மாதங்களில், மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசியும் கோதுமையும் ஒரே கட்டமாக வழங்க தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

இது எதனால் என பார்த்தீர்கள் என்றால் –
இந்த ஆண்டின் பருவத்தில், நாடு முழுவதும் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு அதிக அளவில் அரிசி, கோதுமையை கொள்முதல் செய்திருக்கிறது…
இதனால் கிடங்குகளில் சேமிக்க இடம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த சூழ்நிலையில், மத்திய அரசு – மாநில அரசுகளுக்கு ஒரு அறிவுறுத்தல் கொடுத்திருக்கிறது.
அதாவது, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான அரிசி, கோதுமையை ஒரே தவணையில் வழங்க சொல்லி இருக்கிறது

இந்த அறிவுறுத்தலை மதித்து, தமிழக அரசு பரிசீலனையில் இறங்கியிருக்கிறது.
அதன்படி – மூன்று மாதங்களுக்கு தேவையான அரிசி, கோதுமையை ஒரே முறையில் ரேஷன் கடைகளில் வழங்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தமிழ்நாட்டில் மாதந்தோறும் 2.21 கோடி அரிசி கார்டுதாரர்கள் இலவச அரிசி பெற்று வருகிறார்கள்.
இதில், 1.11 கோடி பேர் முன்னுரிமை மற்றும் அந்தியோதயா வகையில்சேர்ந்தவர்கள். இவர்களுக்காக மத்திய அரசு 2.05 லட்சம் டன் அரிசி மற்றும் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்திருக்கும்.
மீதமுள்ள 1.10 கோடி முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கான செலவை தமிழ்நாடு அரசு தனியாக ஏற்றுக் கொண்டுள்ளது.

இப்போது கேள்வி என்னவென்றால் –
இந்த மூன்று மாதங்களுக்கான பொருட்கள் ஜூன் மாதத்திலா வழங்கப்படும்? அல்லது ஜூலையா? என்பது தான்.

இதைப் பற்றி அரசு இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லையாம்.
விரைவில் தெளிவான அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news