Tuesday, June 24, 2025

‘interview’ ல மொழி தெரியாம சிரமப்படுறீங்களா? ‘கூகுள் மீட்’ கொண்டு வந்த அதிரடி ‘update’!

கூகுள் மீட்டில் வரவேற்கப்படும் ஒரு பெரிய மாற்றம்… இனி உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பேச, மொழி ஒரு தடையாக இருக்காது.

கூகுள் I/O 2025 நிகழ்வில், கூகுள் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நீங்கள் பேசியதை எதிர்ப்புறம் இருப்பவர் விரும்பும் மொழியில், நேரடியாக  குரலோடு மொழிபெயர்த்து தரும். அதாவது, ஒரே நேரத்தில் உரையாடல்களை நீங்கள் விரும்பும் மொழிபெயர்ப்புடன் நடத்த முடியும்.

இதில் முக்கியமானது என்னவனென்றால், அந்த பேச்சு மொழிபெயர்க்கப்படும்போது, பேசியவர் குரலின் ஒலி, உணர்ச்சி எல்லாமே கையாளப்படும். நேரடி மொழிபெயர்ப்பு மட்டும் இல்லாமல் , உணர்வும் ஒளிவுமாக உரையாடல் நடக்கிறது.

இது முதலில் ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளுக்குள் அமல்படுத்தப்படுகிறது. விரைவில் ஜெர்மன், இத்தாலியன் மற்றும் போர்ச்சுகீசியம் போன்ற மொழிகளுக்கும் விரிவாக அமையப் போகிறது.

இந்த வசதி தற்போது Google-ன் AI சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருக்கும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால், Google Workspace-ஐ பயன்படுத்தும் நிறுவனங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் இதைப் பெறுவார்கள்.

இதேவேளை, கூகுள் அதன் பிக்சல் பயனர்களுக்காக ஆண்ட்ராய்டு 16 இன் இறுதி பீட்டா பதிப்பையும் வெளியிட்டுள்ளது. இதில், user interface design மற்றும் தனியுரிமை பாதுகாப்பு சார்ந்த முக்கியமான மேம்பாடுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

உலக தொடர்புக்கு புதிய பரிமாணம் தரும் இந்த வசதி, வருங்காலத்தில் இணைய வழி உரையாடல்களுக்கே ஒரு புதிய வரம்பை அமைக்கப்போகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news