8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டி

58

மகாராஷ்டிராவில் 8 மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். நாசிக் பகுதியை சேர்ந்த குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நகவெட்டியை விழுங்கியது. பதற்போன பெற்றோர், குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர்.

நகவெட்டி தொண்டையில் சிக்கியிருப்பதை அறிந்த மருத்துவர்கள், அரை மணி நேரப் போராட்டத்திற்கு அதனை வெளியே எடுத்து, பெற்றோரை நிம்மதி அடைய செய்தனர்.