Tuesday, June 24, 2025

திடீரென்று தோன்றி காணாமல் போன ‘பேய்’ ஏரி! அமெரிக்காவில் நிகழ்ந்த மர்மம்!

ஒரு காலத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில், சான் ஜோவாகின் பள்ளத்தாக்கில், துலாரே ஏரி என்ற ஒரு மாபெரும் நீர்நிலை இருந்தது. இது சுமார் 100 மைல் நீளமும் 30 மைல் அகலமும் கொண்டது. அந்த காலத்தில், ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் வரை நீராவிக் கப்பலிலேயே பயணிக்க வேண்டிய அளவுக்கு ஆழம் கொண்ட ஏரி!

ஆனால் விவசாய பாசனத்திற்காக மனிதர்கள் அந்த ஏரியைச் சேர்க்கும் ஆறுகளையும், நீர்ப் போக்குகளைத் தடை செய்து விட்டனர். அதனால், நூற்றாண்டுக்கு முன்பு, அந்த ஏரி காணாமல் போனது. வறண்ட நிலமாக மாறியது. அந்தப் பகுதியில் வாழ்ந்த டாச்சி யோகுட் பழங்குடியினர், தங்கள் வாழ்வாதாரம் முழுவதும் இதைத்தான் நம்பியிருந்தனர். சியரா நெவாடா மலைகளிலிருந்து வரும் பனியுருகல் தான் இந்த ஏரியின் உயிராக இருந்தது.

மிக நீண்ட காலம் வெறும் வெறிச்சோடிய நிலமாகவே இருந்த இந்த இடம், 130 ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென மீண்டும் ஏரியாக மாறியுள்ளது! கடந்த ஆண்டு, அந்த மலைகளில் அதிகளவில் பனி உருகியது. அதன் காரணமாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆறுகள் மீண்டும் துலாரே ஏரிக்கே திரும்பி ஓடத் தொடங்கின. அதன் விளைவாக, ஏரியில் மீண்டும் நீர் நிரம்ப ஆரம்பித்தது!

இது அந்த இடத்தில் வாழும் பழங்குடியின மக்களுக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி. ஆனால் இதே நேரத்தில், கடந்த பல ஆண்டுகளாக அங்கே விவசாயம் செய்து வந்தவர்களும், வீடுகள் கட்டியிருந்தவர்களும் குழப்பமடைந்துள்ளனர். ஏறக்குறைய 93 ஆயிரம் ஏக்கர் நிலம் நீரில் மூழ்கி வருகிறது.

இந்த நிகழ்வு, இயற்கையுடன் நம் தொடர்பு எப்படி மாறி விட்டது என்பதையும், மனிதர் இஷ்டப்படி இயற்கையை கட்டுப்படுத்த முயற்சித்தால், அது எப்படியெல்லாம் நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் என்பதையும் நம்மிடம் சொல்லிக்கொடுக்கிறது.

மறைந்து போன ஒரு ஏரி… 130 ஆண்டுகள் கழித்து, மீண்டும் உயிர்த்தெழும் இந்த அதிசயக் காட்சியை, அங்கே உள்ள மக்கள் “கோஸ்ட் லேக்” அல்லது பேய் ஏரி என அழைக்கின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news