டெல்லியில் பாஜக எம்.பி-யின் சவாலை ஏற்று, டெல்லி அதிகாரி ஒருவர் யமுனை ஆற்றில் குளித்து காண்பித்துள்ளார்.
சத் பூஜையை முன்னிட்டு யமுனை ஆற்று நீரில் நுரையை போக்குவதற்காக ஒரு வகை ரசாயனம் சேர்க்கப்பட்டு உள்ளது. இதனிடையே யமுனை ஆற்று நீரானது விஷம் நிறைந்து உள்ளது. அதில் நஞ்சு கலந்துள்ளது என பாஜக எம்.பி. பர்வேஷ் குற்றச்சாட்டாக கூறினார்.
யமுனை ஆற்றில் குளிக்க முடியுமா? என கூறி டெல்லி நீர் வாரிய இயக்குனர் சஞ்சய் சர்மாவிடம் பாஜக எம்.பி. பர்வேஷ் சவால் விட்டார். இதன்பின்பு அவர், யமுனை ஆற்று தண்ணீர் விஷமில்லை என நிரூபிப்பதற்காக, நுரையை நீக்கும் ரசாயனங்களை ஆற்று நீரில் கலந்து, பின்னர் அதனை தலையில் ஊற்றி குளித்து காண்பித்து உள்ளார்.
தவறான கருத்துகள் எல்லா இடங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன என்றும் இந்த ரசாயனம் விஷமில்லை என நிரூபிக்கவே இதனை செய்தேன் என டெல்லி அதிகாரி சஞ்சய் சர்மா தெரிவித்தார். இந்த குளியலுக்கு பின்னர் தனது தோலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் இந்த ரசாயனம் உணவு பதப்படுத்துதல் மற்றும் ஒப்பனை பொருட்களின் பயன்படுத்தப்படும் “பாலி ஆக்சி புரொப்பைலீன்” வகையை சேர்ந்த ரசாயனம் எனவும் அவர் தெரிவித்தார்.