திருச்சி மாவட்டம் சென்னக்கரை பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (33) என்பவர் நேற்று முன்தினம் சிறுகாம்பூரில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், மது பாட்டில் வாங்கியுள்ளார். மதுவை குடித்த போது, பாட்டிலில் அடைப்பு இருந்ததை உணர்ந்த அவர் மொபைல் போன் டார்ச் லைட் அடித்து பார்த்த போது, மது பாட்டிலுக்குள் இறந்து நிலையில் தவளை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
மது பாட்டிலுடன் டாஸ்மாக் கடைக்கு சென்ற வேல்முருகன் டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர்கள் வேல்முருகனை தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர். இதையடுத்து வேல்முருகன் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.