அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவாக உள்ளது. இதற்காகப் பல லட்சம் மாணவர்கள் இரவு, பகல் பாராமல் படித்து, மத்திய மற்றும் மாநில அரசுப் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருகின்றனர். குறிப்பாக, இந்திய குடிமைப் பணியில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்தும் தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
மாணவர்களின் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான தயாரிப்பை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில், UPSC குடிமைப் பணித் தேர்வில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக இளைஞர்கள் அதிக அளவில் ஒன்றிய அரசுப் பணிகளில் சேர வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு அரசு UPSC குடிமைப் பணித் தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், 2026ஆம் ஆண்டு UPSC குடிமைப் பணித் தேர்வின் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகையைப் பெறத் தகுதியுள்ள மாணவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் தேதி:21.11.2026 முதல் 30.11.2026 வரை.
விண்ணப்பிக்கும் இணையதளம்: (https://skilldevelopment.tn.gov.in/)
எனவே, 2026ஆம் ஆண்டு UPSC முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் இணையதளத்தில் விண்ணப்பித்து ரூ.50,000 ஊக்கத்தொகையைப் பெறலாம். கடைசி நேரத் தாமதத்தைத் தவிர்க்க முன்கூட்டியே விண்ணப்பிப்பது நல்லது.
