நகை வாங்குவோருக்கு ஜாக்பாட்… தங்கம் விலை மீண்டும் சரிவு!!

இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை, அதன் பிறகு ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்துக்கு கீழ் குறையும் என கடந்த செப்டம்பர் மாத இறுதியில் இருந்தே நிபுணர்கள் கணித்து வந்தனர்.

அதன்படி, கடந்த 10-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 18-ந்தேதி சவரனுக்கு ரூ.2,040-ம், அதற்கு அடுத்த நாளில் ரூ.1,880-ம் குறைந்தது.

இதன் தொடர்ச்சியாக நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3,760 குறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஒரு கிராம் ரூ.11,510-க்கும், ஒரு சவரன் ரூ.92,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 10-ந்தேதி முதல் நேற்று வரை சவரனுக்கு ரூ.13,960 வரை விலை குறைந்துள்ளது. இது ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றும் தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.11,465-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.91,720-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதற்கிடையே, வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1,75,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News