தங்கம் விலை கிடுகிடு சரிவு.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த நாட்கள் நெருங்கி வருவதால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

கடந்த 26-ந்தேதி சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும், 27-ந்தேதி ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனையானது. தொடர்ந்து 28-ந்தேதி சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-ஐ எட்டியது. நேற்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.155 குறைந்து ரூ.13,040-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ரூ.1,04,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.210-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.10 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைவு நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.

Related News

Latest News