நகை வாங்கக் காத்திருப்போருக்கு அதிர்ச்சி!! தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சென்னையில் கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அரசியல் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட காரணிகள் தங்கத்தின் விலையைத் தீர்மானிக்கின்றன. அக்டோபர் மாதத் தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை சரிந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.

நேற்று தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.13,085-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று (அக்டோபர் 27) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கும், கிராமுக்கு ரூ.50 அதிகரித்து ரூ.13,135-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.14,329-க்கும், சவரன் ரூ.1,14,632-க்கும் விற்பனையாகிறது.

இதற்கிடையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.220-க்கும், ஒரு கிலோ ரூ.2,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

Related News

Latest News