இன்றும் உயர்ந்த தங்கம் விலை.. சவரன் எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 19-ந்தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,08,560-க்கு விற்பனையான நிலையில், தொடர்ந்து நான்கு நாட்கள் விலை குறைந்து 23-ந்தேதி ரூ.1,04,480-ஆக சரிந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

24-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் சவரன் ரூ.1,04,560-க்கு விற்பனையானது. 26-ந்தேதி ரூ.120 உயர்ந்து ரூ.1,04,680-ஆக இருந்தது. நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,05,080-க்கு விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.1,05,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.60 அதிகரித்து ரூ.13,195-ஆக உள்ளது.

வெள்ளி விலை தொடர்ந்து நான்காவது நாளாக மாற்றமின்றி காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.220-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2.20 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News