பத்திரப் பதிவு செய்ய புது ‘கட்டணம்’? தமிழக அரசு அதிரடி அரசாணை!

சொத்து வாங்குவது, விற்பது அல்லது திருமணம் பதிவு செய்ய வேண்டும் என்றால், இதுவரை நாம் சம்பந்தப்பட்ட ஏரியாவில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று பல மணி நேரம் காத்துக்கிடந்து பதிவு செய்வதுதான் வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆனால், சாமானிய மக்களின் இந்த அலைக்கழிப்பைக் குறைப்பதற்காகத் தமிழக அரசு தற்போது ஒரு மாபெரும் அதிரடி மாற்றத்தைக் கையில் எடுத்துள்ளது. அதன்படி, மக்கள் தங்களுக்கு வசதியான எந்த இடத்திலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளும் வகையில், புதிய ‘மாதிரி ஆவணப் பதிவு மையங்கள்’ எனப்படும் ‘மாடல் ரிஜிஸ்ட்ரேஷன் சென்டர்களை’ தொடங்கத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியிட்டுள்ளது

இந்த மையங்களில் பத்திரம் பதிவு செய்ய தட்கல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்கள் எவ்வளவு கட்டணம் கட்ட வேண்டும்? இது எப்படிச் செயல்படும்? வாருங்கள் மிக விரிவாகப் பார்க்கலாம்.

இந்த மாடல் மையங்களை அமைப்பதற்காகத் தமிழக அரசு சுமார் ஏழு கோடியே எண்பத்தி நான்கு லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.

முதல் கட்டமாகச் சென்னை வடக்கு, மத்திய சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு மற்றும் கோவை வடக்கு ஆகிய ஐந்து இடங்களில் இந்த அதிநவீன மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களின் பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பொறுப்புகள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இந்த புதிய மையங்களில் பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப நான்கு வகையான சேவைகளைத் தேர்ந்தெடுக்கலாம். வழக்கமான முறையில் காத்திருந்து பதிவு செய்ய இரண்டாயிரம் ரூபாய், உடனடியாகப் பதிவு செய்யும் தட்கல் சேவைக்கு ஐயாயிரம் ரூபாய், மற்றும் விஐபிக்களுக்கான பிரீமியம் சேவைக்கு ஐயாயிரம் ரூபாய் என அரசு கட்டணம் நிர்ணயித்துள்ளது.

இதில் உச்சகட்டமாக, எந்தவொரு காத்திருப்பும் இன்றி உடனடியாக விஐபி முறையில் பதிவு செய்ய ‘தட்கல் பிரீமியம் சேவை’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்குக் கட்டணமாக பத்தாயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பத்தாயிரம் ரூபாய் என்பது அந்த மையங்களில் வழங்கப்படும் அதிநவீன வசதிகளுக்கான கட்டணம் மட்டுமே.

இதோடு சேர்த்து நீங்கள் வழக்கம் போலக் கட்ட வேண்டிய முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களையும் கட்டியாக வேண்டும்.

இந்த மையங்களில் வசூலிக்கப்படும் கட்டணத்தில், எட்டு பங்குகூட தனியார் நிறுவனத்திற்கும், மீதி அரசுக்கும் என லாபமும் பங்கிடப்பட உள்ளது.

ஐடி கம்பெனிகளைப் போல ஏசி வசதிகளோடு, தனியார் மூலம் நிர்வகிக்கப்படும் இந்த புதிய பத்திரப் பதிவு மையங்கள், நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையுமா அல்லது கூடுதல் நிதிச்சுமையாக மாறுமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News