அமெரிக்காவை சேர்ந்த 27 வயது நிரம்பிய பெண் ஒருவர் மருந்துக்கு பதிலாக தன்னுடைய ஏற்பாட்ஸை விழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அமெரிக்காவில் உள்ள பாஸ்டன் நகரைச் சேர்ந்த 27 வயது பாடகாஸ்டர் கார்லி பெல்மர் என்பவர், இரவு நேரத்தில் தனது ஒரு கையில் வலி நிவாரண மாத்திரையும் ஏற்பாட்ஸையும் வைத்திருந்தபடி படுக்கையில் இருந்ததாக சொல்லத்தப்படுகிறது.
இரண்டையும் ஒன்றாக வைத்திருந்ததால் குழப்பமடைந்த அவர் மருந்துக்கு பதிலாக ஏற்பாட்ஸை தண்ணீருடன் உட்கொண்டுள்ளாதாக கூறப்படுகிறது. முதலில் என்ன நடந்தது என்பதை உணராத கார்லி பிறகு தனது தொண்டையில் ஏற்பட்ட அசௌகரியம் வைத்து , தான் மருந்தை உட்கொள்ளவில்லை மாறுதலாக ஏற்பாட்ஸை உட்கொண்டுவிட்டோம் என்பதை உணர்ந்துள்ளார்.
மேலும் தான் விழுங்கிய ஏற்பாட்ஸை உடனடியாக எடுக்க முயன்றுள்ளார் கார்லி .ஆனால் அந்த முயற்சி தோல்வியானது. இதற்கிடையில் கார்லி தன்னுடைய ஏற்பாட்ஸை தனது தொலைபேசியுடன் இணைத்திருந்தார்.
அவர் மாத்திரை விழுங்குவதற்கு முன்பாக தனது தோழி ஒருவருக்கு குரல் செய்தியை அனுப்பியுள்ளார்.அந்த குரல் செய்தியானது கார்லியின் வைற்றுப்பகுதியிலிருந்து சத்தம் வருவது போன்றதான உணர்வைத் தந்துள்ளது .இந்த உணர்வு கார்லியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதன் பின்னர் கார்லி உடனடியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்பாட்ஸ்ஸானது செரிமான மண்டலத்தை அடைந்திருப்பது தெளிவாக தெரிவதாக கூறினார் கூறினார். மேலும், நிலைமை சாதாரணமாக இருந்ததால் உடலில் கருவியை அனுப்பி ஏற்பாட்ஸை வெளியேற்றிவிடலாம் என மருத்துவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஏர்பாட்ஸ் பெரிய பிரச்சனைகள் ஏதுமின்றி உடலிலிருந்து வெளியேறியது, கார்லி முற்றிலும் பாதுகாப்பாக இருந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எந்தவொரு மின்னணு சாதனத்தையும் விழுங்குவது மிகவும் ஆபத்தானது என்றும் , உடலுக்குள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மின்கலன்கள் உள்ள சாதனங்களை விழுங்குவது மிகவும் ஆபத்தானது என்றும் மருத்துவர் வலியுறுத்தியுள்ளார் .
இந்த சம்பவங்களை தனது டிக்டாக்கில் பதிவிட்டார் கார்லி. இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியதோடு இணையதளவாசிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், தவறுதலாக ஏற்பாட்ஸை விழுங்கிய முதல் நபர் கார்லி மட்டும் அல்ல. 2021-ஆம் ஆண்டில், மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஒருவர் தூக்கத்தில் தனது ஏற்பாட்ஸை விழுங்கியதால், மூச்சுவிடச் சிரமப்பட்டு விழித்தெழுந்துள்ளார்.
பிறகு மருத்துவர்கள் அவசர எண்டோஸ்கோபி செய்து ஏற்பாட்ஸை வெளியேற்றினர் . இதனை இன்டிபென்டன்ட் பத்திரிகை ஒன்று பிராட் கௌதியர் முழுமையாகக் குணமடைந்தார் ஆனால், ஏர்பாட் குணமடையவில்லை என்ற வாசகத்தோடு பத்திரிகையில் குறிப்பிட்டியிருந்தனர்.
மேலும் ஜார்ஜியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவரும் ,2019-ல், தைவானைச் சேர்ந்த ஒருவரும் இதேபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்டனர் என தெரியவந்துள்ளது.
