சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் போர் பதற்றம் போன்ற காரணங்களால் தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக ஒரு கிராம் 22 கேரட் தங்கம் ரூ.13,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,06,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னர் நேற்று தங்கம் விலை சரிவடைந்து, ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.1,05,600-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.400 குறைந்து ரூ.1,05,200-க்கும், ஒரு கிராம் ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.235-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் முதலீட்டாளர்களின் செயல்பாடுகள் ஆகியவை தங்கம், வெள்ளி விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன
