தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி சில நாட்கள் ஆன பிறகும், அந்த அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், டெல்லியில இருக்குற பாஜக மேலிடத்துக்கு இப்போதான் ‘நிஜமான தலைவலி’ ஆரம்பிச்சிருக்கு.
அ.தி.மு.க. கூட்டணியில 27 இடங்கள்ல ‘கெத்தா’ களம் இறங்கின பாஜக-வுக்கு, கடைசியில கையில கிடைச்சது என்னமோ வெறும் ‘ஒரே ஒரு’ சீட்டுதான். பிரதமர் நரேந்திர மோடி முதல் மத்திய அமைச்சர்கள் வரை பலரும் தமிழகத்துல முகாமிட்டு, சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்ட போதிலும், ரிசல்ட் என்னமோ ‘சுணக்கமா’ போயிருச்சுன்னு டெல்லி தலைமை இப்போ தலையை பிச்சிக்கிட்டு இருக்காங்க.
குறிப்பா சொல்லணும்னா, கட்சியோட ‘ஸ்டார்’ வேட்பாளர்களான மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் போன்ற முன்னணித் தலைவர்களே வெற்றிக் கனியைப் பறிப்பாங்கன்னு பார்த்தா, ஏமாற்றமே மிஞ்சியிருக்கு. இதுதான் இப்போ இராஜதந்திர வட்டாரத்துல ஒரு பெரிய ‘ஜோக்’ கலந்த சீரியஸ் விவாதமா மாறியிருக்கு. “அட, ஹெலிகாப்டர்ல வந்து இறங்கி இவ்வளவு தூரம் கத்துனோம்..
ஆனா ஒரு சீட்டுதான் ஜெயிச்சிருக்கோமா?”-னு டெல்லி மேலிடம் ரொம்பவே அப்செட்ல இருக்காங்களாம். ஏன் இந்த ‘படுதோல்வி’? அப்படிங்கிற கேள்விக்கு விடை தேட டெல்லி இப்போ அதிரடியா களத்துல இறங்கியிருக்கு. ஏன்னா, போன நாடாளுமன்றத் தேர்தல்ல தமிழகத்துல பாஜக 12 இடங்கள்ல இரண்டாம் இடத்தைப் பிடிச்சு, ‘நாங்க வளர்ந்துட்டோம்’னு கெத்து காமிச்சுட்டு இருந்தாங்க.
ஆனா, இந்தச் சட்டசபை தேர்தல்ல அப்படியே ‘பல்டி’ அடிச்சு வாக்கு வங்கி சரிஞ்சது எப்படிங்கிறது தான் இப்போ பெரிய புதிரா இருக்கு. தாமரைச் சின்னத்துல போட்டியிட்ட கூட்டணிக் கட்சி வேட்பாளர்களும் கூட தோத்துப் போனது, பிஜேபி-யோட ஸ்ட்ரேட்டஜியில ஒரு பெரிய ‘ஓட்டை’ இருக்குறத மேலிடத்துக்குப் புரிய வச்சிருக்கு.
இந்தச் சூழல்ல தான், டெல்லி மேலிடம் ஒரு ‘சீக்ரெட் மிஷன்’ ஆரம்பிச்சிருக்காங்க. தமிழக பாஜக-வோட இந்தத் தோல்விக்கு உண்மையான காரணம் என்னன்னு ஆராய்ந்து ஒரு ‘ரிப்போர்ட்’ கொடுக்கச் சொல்லியிருக்காங்க. இதற்காக ஒரு சிறப்புக் குழு சீக்கிரமே தமிழகத்துக்கு வரப்போகுது. அவங்க ஒவ்வொரு தொகுதிக்கும் போய், கூட்டணிக் கட்சிகள் கூடவே இருந்து குழி பறிச்சாங்களா? இல்ல வேட்பாளர் தேர்வுல ஏதாவது குளறுபடி நடந்துச்சா? அப்படீன்னு சிபிஐ ரேஞ்சுக்கு விசாரணை நடத்தப் போறாங்களாம்.
இந்தத் தோல்வி ஒரு பக்கம் இருக்க, இப்போ கட்சிக்குள்ள ஒரு புது ‘ரூமர்’ தீயாய் பரவிக்கிட்டு இருக்கு. தமிழக பாஜக மாநிலத் தலைவர் பதவியில இருந்து நயினார் நாகேந்திரனை மாத்திட்டு, புதுசா ஒருத்தரை அந்தச் ‘சேர்’ல உட்கார வைக்கப் போறாங்களாம். இதைப்பற்றி கட்சி நிர்வாகிகள்கிட்ட கேட்டா, “தோல்வி வந்தா ஆய்வு பண்றது சகஜம்தானே சார்..
இது வளர்ச்சிக்கு நல்லதுதான்”னு மழுப்பினாலும், டெல்லி கேட்டிருக்க அந்த ரகசிய அறிக்கை பல பேரோட ‘அரசியல் ஜாதகத்தை’ மாத்தி எழுதப்போகுதுங்கிறது மட்டும் உறுதி. தமிழகத்துல காலூன்றத் துடிச்ச பாஜக-வோட இந்தத் திடீர் சறுக்கலுக்குப் பின்னாடி இருக்குற அந்த மர்மம் என்னன்னு இன்னும் சில நாட்கள்ல தெரிஞ்சுடும்.
