தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்.. விற்றுத் தள்ளும் மத்திய வங்கிகள்.. காரணம் என்ன?

2026 ஜனவரி மாதம் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 1.80 லட்சத்தை எட்டியது. தங்கத்தின் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்துவதில் மத்திய வங்கிகள் முக்கியப் பங்கு வகித்தன. 2024ஆம் ஆண்டில் 345 டன்னாக இருந்த தங்கக் கொள்முதல், 2025ஆம் ஆண்டில் 328 டன்னாகக் குறைந்தது.

கடந்த ஆண்டு தங்கத்தை வாங்கிய மத்திய வங்கிகள் இப்போது அதே வேகத்தில் விற்று வருகின்றன. சமீபத்தில், ரஷ்யா தனது தங்கக் கையிருப்பில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் 14 டன் தங்கத்தை விற்றது. பிரான்ஸ், நியூயார்க்கில் உள்ள அமெரிக்க தங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் சேமித்து வைத்திருந்த தனது தங்கம் அனைத்தையும் விற்றுவிட்டது. துருக்கி சுமார் 60 டன் தங்கத்தை விற்றது. இவ்வாறு மத்திய வங்கிகள் தங்கத்தை விற்கக் காரணம் என்ன?

2026 ஏப்ரல் மாதத்துக்கான சமீபத்திய அறிக்கைகள் இன்னும் அதிர்ச்சியளிக்கின்றன. இதுவரை தங்கத்தின் மிகப்பெரிய வாங்குபவர்களாக இருந்த உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் இப்போது மிகப்பெரிய விற்பனையாளர்களாக உருவெடுத்துள்ளன.இதற்க்கு காரணம் மத்திய கிழக்கு போரும், தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலைகளும் தங்கத்தின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளன. இந்த நெருக்கடி, முக்கிய நாடுகளில் உள்ள மத்திய வங்கிகளைத் தங்கத்தை விற்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளது. பணப்புழக்க அழுத்தங்கள் காரணமாக மத்திய வங்கிகள் தங்கத்திலிருந்து தங்கள் கவனத்தைத் திருப்புகின்றன. வங்கிகளின் இந்த நடவடிக்கை, 2026 ஜனவரி மாதம் முதல் தங்கத்தின் விலையில் 12 சதவீத சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக தங்கக் கொள்முதலைச் செய்த போலந்து டாலர்களைத் திரட்டுவதற்காகத் தங்கத்தை விற்கத் தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, மத்திய வங்கிகள் லாபம் ஈட்டுவதற்காகத் தங்கத்தை விற்கவில்லை; மாறாகத் தங்கள் நாணயங்களைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தின் காரணமாகவே விற்கின்றன என்பது தெளிவாகிறது.

மத்திய வங்கிகள் இதே விகிதத்தில் தங்கத்தைத் தொடர்ந்து விற்றால் அடுத்து வரும் நாட்களில் விலைகள் மேலும் சரிவைக் காணலாம் என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் . ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான போர் முடிவுக்கு வந்து, உலகளாவிய புவிசார் அரசியல் பதற்றங்கள் தணிந்தால் தங்கம் விலை மீண்டும் உயரலாம். அதேபோல, கச்சா எண்ணெய் விலை சரிந்து டாலர் பலவீனமடைந்தால் தங்கம் விலை மீண்டும் உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related News

Latest News