ஏர் இந்தியா விமானத்தில் நாளை முதல் டிக்கெட் விலை உயர்வு

உள்நாட்டு, வெளிநாட்டு பயணத்திற்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வால் விமான டிக்கெட் விலை நாளை முதல் (8-4-2026) உயர்த்தப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

உள்நாட்டு பயணத்தின் எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வு விவரம்:

0-500 கி.மீ – ரூ. 299

501-1000 கி.மீ – ரூ. 399

1001-1500 கி.மீ – ரூ. 549

1501-2000 கி.மீ – ரூ. 749

2000கி.மீ அதிகமாக – ரூ. 899

வெளிநாட்டு பயணத்தின் எரிபொருள் கூடுதல் கட்டண உயர்வு விவரம்:

சார்க் நாடுகள் (வங்காளதேசம் தவிர) – 24 டாலர்கள்

மத்திய கிழக்கு நாடுகள் – 50 டாலர்கள்

சீனா & தென்கிழக்கு ஆசியா (சிங்கப்பூர் தவிர) – 100 டாலர்கள்

சிங்கப்பூர் – 60 டாலர்கள்

ஆப்பிரிக்கா – 130 டாலர்கள்

ஐரோப்பியா – 205 டாலர்கள்

வட அமெரிக்கா – 280 டாலர்கள்

ஆஸ்திரேலியா – 280 டாலர்கள்

Related News

Latest News