புதுவையில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 23 கடைசி நாளாகும்.
இந்நிலையில், புதுவையில் 10 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, 9 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்களை இன்று(மார்ச் 21) அறிவித்துள்ளது.
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி நேற்று உறுதியாகியுள்ளது. இந்த கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும் பாஜக 14 இடங்களிலும் பாஜக கூட்டணியில் உள்ள அதிமுக, லட்சிய ஜனநாயகக் கட்சி தலா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
பாஜக 10 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மண்ணடிப்பேட்டை தொகுதியில் புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
முதலியார்பேட்டை – ஜான் குமார்
காலாப்பேட்டை – கல்யாணசுந்தரம்
ராஜ் பவன் – விபி ராமலிங்கம்
ஊசுடு(தனி) – தீப்பைந்தன்
மணவெளி – ஆர். செல்வம்
திருநள்ளாறு – ராஜசேகரன்
நிரவி டி.ஆர். பட்டினம் – மீனாட்சிசுந்தரம்
மாஹே – தினேஷன்
ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
