பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளராக இருந்த ரஞ்சனா நாச்சியார், அக்கட்சியின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகினார்.
பின்னர் கடந்த ஜனவரி மாதம் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.
சமீபத்தில் மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய் ’விவாகரத்து விவகாரம்’ குறித்து பேசிய கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் தவெக நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில், ரஞ்சனா நாச்சியார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுகவில் இணைந்தார்.
