கடந்த ஜூன் 17-ஆம் தேதி முதல் தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் விலை, இன்று உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலையில் கணிசமான குறைவு ஏற்பட்டிருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.210 குறைந்து ரூ.13,350-க்கும், ஒரு சவரன் ரூ.1,680 குறைந்து ரூ.1,06,800-க்கும் விற்பனையானது. அதேபோல் நேற்று மீண்டும் கிராமுக்கு ரூ.210 மற்றும் சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,140-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,120-க்கும் விற்பனையாகியது.
இந்த தொடர் சரிவுக்குப் பிறகு இன்று சந்தையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,05,760-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.80 அதிகரித்து ரூ.13,220-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மட்டுமல்லாமல் வெள்ளி விலையிலும் இன்று உயர்வு காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்து ரூ.235-ஆக உள்ளது. அதேசமயம், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,35,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
