“அதிமுகவை இபிஎஸ் திட்டமிட்டு அழித்து வருகிறார்” – திமுகவில் இணைந்த ஓபிஎஸ் பேட்டி

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். சர்வாதிகாரி போல் நடந்து கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி இனி ஆட்சிக்கே வந்துவிடக்கூடாது என்பதால் தி.மு.க.வில் இணைந்தேன்.

அரசியலில் சர்வாதிகாரியாக ஆணவப்போக்குடன் நடக்கும் இ.பி.எஸ். இனி எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது.

தென் மாவட்டத்தில் அ.தி.மு.க.வை இ.பி.எஸ். திட்டமிட்டு அழித்து வருகிறார்.

தென் மாவட்டத்தில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார்.

ஆணவப்போக்குடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறார்.

அனைவரையும் அரவணைத்து செல்லும் பண்பு எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Latest News