அதென்ன சனிக்கிழமைகளில் பிரசாரம்? இதுதான் காரணம் – விளக்கமளித்த விஜய்

நாகை புத்தூர் ரவுண்டானா அருகே உள்ள அண்ணாசிலை சந்திப்பு பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது சனிக்கிழமைகளில் பிரசாரம் மேற்கொள்வது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அவர் பேசியதாவது;

”அதென்ன சனிக்கிழமைகளில் பிரசாரம் என விமர்சனம் செய்தார்கள். முக்கியமாக உங்கள் வேலைக்கு எந்த இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காக விடுமுறை நாட்களில், ஓய்வு நாட்களில் வருவதுதான் திட்டம். அரசியல் சிலருக்கு நாம் ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா.. அதனால்தான் ஓய்வு நாட்களில் திட்டமிட்டு பிரசாரம் செய்து வருகிறோம்” என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உங்களிடம் நான் பேசுவதே 3 நிமிடங்கள்தான். ஆனால் உங்களை பார்க்க வரும்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். அதை பேசக்கூடாது, இதை பேசக்கூடாது என்கிறார்கள். அரியலூரில் கரண்ட்டை கட் செய்கிறார்கள். பிரதமரோ, உள்துறை மந்திரியோ வரும்போது இதுபோல் கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? நீங்கள்தான் மறைமுக உறவுக்காரர்கள ஆயிற்றே.

இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் விட்டுவிட்டு நேரடியாக கெத்தாக தேர்தலுக்கு வாருங்கள். கொள்ளையடிக்கிற நீங்களா.. இல்லை மக்கள் வீட்டில் ஓட்டாக இருக்கும் நானா என பார்த்துவிடலாம்..” இவ்வாறு அவர் பேசினார்.

Related News

Latest News