விரைவில் புதிய கட்சி? புதிய கொடியை அறிமுகம் செய்த மல்லை சத்யா

மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மல்லை சத்யா தற்காலிகமாகப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து துணைப் பொதுச்செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சி.ஏ. சத்யாவை நிரந்தரமாக நீக்குவதாகவும் வைகோ அறிவித்தார்.

இந்த நிலையில், மதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, காஞ்சிபுரத்தில் புதிய கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி உள்ளார். கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

Latest News