எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருக்கும் வரை திமுகவுக்கு வெற்றிதான்..! – டி.டி.வி தினகரன் பேட்டி

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமமுக அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சிக்காகவும் உழைக்கும் இயக்கும். தேவர் பெயர் மதுரை விமான நிலையத்துக்கு சூட்டப்பட வேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்னர் வாக்குறுதியாக சொல்லியுள்ளேன்.

பழனிசாமி தான் தங்களது வெற்றியின் ரகசியம் என உதயநிதி சொன்னதை அதிமுகவினர் புரிந்து கொள்ள வேண்டும். உதயநிதி உண்மையை சொல்லியிருக்கிறார். துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது

நயினார் நாகேந்திரன் மீது தனிப்பட்ட கோபமில்லை.ஓ.பி.எஸ் விவகாரத்தில் அவர் நடந்து கொண்டது பிடிக்கவில்லை. அவர் நல்ல நண்பராக அவர் என்றும் என்னை சந்திக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related News

Latest News