முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது : அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது அனைவரது மனதிலும் இருக்கிறது. அது நடக்க வேண்டும். அப்படி ஒன்றிணைந்தால்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேறும்.
ஒன்றிணைந்தால் இபிஎஸ்ஸை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், ‘பல பிரச்னைகளை பேச வேண்டியுள்ளது. 6 வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன. அந்த வழக்குகள் எங்கள் தர்ம யுத்தத்தின் அடிப்படை. அதெல்லாம் நிறைவேறும்பட்சத்தில் நாங்கள் யோசனை செய்வோம்’ என்றார்.
