பழங்குடியினர் நலனுக்காக சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது – ராகுல் காந்தி

348

பழங்குடியினர் நலனுக்காக, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் உருவாக்கப்பட்ட சட்டங்களை மத்திய அரசு பலவீனப்படுத்தி வருகிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, புல்தானா மாவட்டத்தில் உள்ள ஜல்கான்-ஜமோத் பகுதியில் ஆதிவாசி மகளிர் தொழிலாளர்களிடையே உரையாற்றினார். பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை புரிந்து கொள்ளாவிட்டால் நாட்டைப் புரிந்து கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

பழங்குடியினரின் நிலங்களை பறித்து தனது தொழிலதிபர் நண்பர்களுக்கு வழங்க பிரதமர் விரும்புவதாக ராகுல்காந்தி விமர்சித்தார். காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு பழங்குடியினர் நலனுக்கான சட்டங்களை மேலும் பலப்படுத்துவதுடன், புதிய சட்டங்கள் இயற்றப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதியளித்தார்.