மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து, அதன் பேட்டரி செயலிழந்துவிட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் மிகப்பெரிய செவ்வாய் கிரக ஆராய்ச்சி திட்டத்தில், விண்ணில் செலுத்தப்பட்ட மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
450 கோடி ரூபாய் செலவில் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் தேதி மங்கல்யான் PSLV C25, ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதனையடுத்து மங்கல்யான் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரக வெளிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மங்கல்யான் விண்கலத்தில் எரிபொருள் தீர்ந்து விட்டதால், கடந்த 8 ஆண்டு கால உழைப்பு வீணாகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விண்கலத்தில் பேட்டரி பாதுகாப்பு வரம்பை மீறி செயலிழந்துவிட்டது என்றும் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது எனவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.