மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் ஒரு இரவு முழுவதும் பிரசவ வழியால் துடித்து , அடுத்தநாள் காலை மருத்துவமனையின் வளாகத்தில் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ள அதிர்ச்சியூட்டும் சம்பவம் டெல்லில் நடந்துள்ளது.
டெல்லியிலுள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில், 30 வயதான பெண் ஒருவர், பிரசவத்துக்காக சென்றிருக்கிறார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் அந்தக் கர்ப்பிணியை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக மருத்துவர்களிடம் அந்தப் பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதம் செய்தும், அவர்கள் அனுமதிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது.
அதையடுத்து, இரவு முழுவதும் அந்த பெண் வலியில் துடித்தபடி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியிலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், காலை அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனை வளாகத்தில் பெண் குழந்தை குறைந்தது.சில செவிலியர்கள் மற்றும் அங்கிருந்த பெண்கள் சேலையால் மறைத்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
குழந்தை பிறந்த பிறகே மருத்துவர்கள் மருத்துவமனையில் தாய்-சேய் இருவரையும் அனுமதித்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு மூத்த மருத்துவர் கூறுகையில், “அந்த பெண்ணிற்கு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு , மூத்த மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தாய், சேய் இருவருமே நலமாக இருக்கின்றனர் என கூறியுள்ளார்.
அந்த பெண், குழந்தையை பெற்றெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியதை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சசம் மற்றும் டெல்லி மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்க மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.