தெலுங்கானாவில் இடைவிடாத கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நபர் ஒருவர் தனது தலையில் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் மூன்று மாத ஆண் குழந்தையை வைத்து கழுத்தளவு நீரில் மூழ்கியபடி செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மாந்தனி நகர் நீரில் மூழ்கிய நிலையில் , மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, அப்போது நீரில் மூழ்கிய வீட்டிலிருந்து கழுத்தளவு நீரில் மூன்று மாத ஆண் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் வைத்து,அதை தலை மீது ஏந்தி நீரில் மூழ்கிய வீட்டிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நடந்து செல்கிறார் ஒரு நபர்.
அவருடன்,குழந்தையின் தாயை பிடித்த படி மற்றொரு நபர் அவரை பத்திரமாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச்செல்கிறார்.தாயும் குழந்தையும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் எனவும்,மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கிறது.
கனமழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, தொலைதூர கிராமங்கள் தொடர்பு திண்டுக்கப்பட்டுள்ளது,வெள்ளத்தால் வீடுகள் இடிந்து விழும் சம்பவங்கள், மின்சார விநியோகம் தடைபட்டது மற்றும் பயிர்களுக்கு பரவலான சேதம் ஏற்பட்டுள்ளது.மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடிங்கின.