தண்டவாளம் மாறியதால் இரயில் கடத்தப்பட்டதாக கதறி அழுத்த நபர்

205
Advertisement

கர்நாடக சம்பர்க் கிராந்தி விரைவு ரயிலில் பயணித்த பயணி ஒருவர் வழக்கமான பாதையில் பராமரிப்பு பணிக்காக ரயில் வேறு பாதிக்கு திருப்பிவிட்டதால் பதற்றமடைந்தார்.

அதிர்ச்சியில் இருந்த அந்த நபர், உடனே தன் போனை எடுத்து, தன் ட்விட்டரில், ரயில் கடத்தப்பட்டதாக அறிவித்து, ஐஆர்சிடிசி மற்றும் டிஆர்எம் செகந்திராபாத்தை தனது ட்வீட்டில் டேக் செய்து உதவி கேட்டுள்ளார் .

அதில் “அன்புள்ள @IRCTCofficial @drmsecunderabad ரயில் எண்-12650 கடத்தப்பட்டது தயவுசெய்து உதவுங்கள்!!!! #ரயிலைக் கடத்தப்பட்டது  #உதவி,” என்று ட்விட் செய்துள்ளார்.

இதை கவனித்த ரயில்வே சேவா கைப்பிடி,குறிப்பிட்ட இரயிலின் சிக்கலைக் கவனிக்க இரயில்வே  காவல்துறையை  எச்சரித்தது.பின் விசாரணையில் தான் தெரிந்த்தது குறிப்பிட்ட பாதையில்  சில பணிகள் நடந்துவந்துள்ளது.

அதையடுத்து, “ஐயா, காசிபேட்டாவுக்கும் பால்ராஷாவுக்கும் இடையே வேலை நடந்து கொண்டிருக்கிறது, எனவே, ஹைதராபாத் டிவிஷன் வழியாக  நீங்கள் பயணிக்கும் இரயில் வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டது. பீதி அடைய வேண்டாம்” என்று தென் மத்திய ரயில்வேயின் ஆர்பிஎஃப், பயத்தில் ட்விட் செய்தவற்கு ட்விட்டரில் பதிலளித்தது. இந்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.