உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் , வகுப்பறையில் சத்தம் போட்டதற்காக குழந்தையை ஆசிரியை ஒருவர் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலின்படி, அசோகா தொகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.குழந்தையை தாக்கிய ஆசிரியை சுனில் குமாரி என அடையாளம் காணப்பட்டு உள்ளது.இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதையடுத்து, ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக , இந்த சம்பவம் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்தும் , சம்மந்தப்பட்ட ஆசிரியை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.